ரவா கேசரி (4)

on on off off off 2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

நெய் - 1/4 கப்

சீனி - 1 1/2 அல்லது 2 கப்

ஏலக்காய் - 2 அல்லது 3

முந்திரிப்பருப்பு - தேவைக்கேற்ப

கிஸ்மிஸ் பழம் - தேவைக்கேற்ப

தண்ணீர் - 2 கப்

கேசரிப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை:

வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழம் இவற்றை சிவக்க வறுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.

ரவையை மணம் வரும்படி வறுத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரம் அல்லது வாணலியில் ரவையின் அளவிற்கு இரு பங்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

இதில் சீனி, கேசரிப்பொடி சேர்த்து கலந்துவிடவும். ஏலக்காயை பொடியாக அரைத்து வைத்து இருந்தால் இப்போதே சேர்த்துக் கொள்ளலாம்.

தண்ணீர் கொதித்ததும், ரவையை கட்டி விழாமல் சிறிது சிறிதாக இட்டு, தீயை குறைத்து வைத்து கிளறவும். இதனுடன் நெய்யையும் சேர்த்து கலக்கி வேகவிடவும்.

நன்கு வெந்ததும் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழம் தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: