ரவா கேசரி
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
சீனி - 2 கப்
நெய் - 3/4 கப்
முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு - தலா 6
ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
செய்முறை:
முந்திரிப்பருப்பையும், பாதாம் பருப்பையும் நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து கால் கப் நெய் ஊற்றவும். நெய் நன்றாக சூடேறியதும் அதில் ரவையைக் கொட்டி சிவக்க வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். (ரவை சலசலவென்று வறுபட வேண்டும்).
நாண் ஸ்டிக் தவாவில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கேசரி பவுடர் மற்றும் ஏலக்காய்ப் பொடி சேர்க்கவும். அத்துடன் ஒரு மேசைக்கரண்டி அளவு நெய்யையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்றாகக் கொதிக்கத் துவங்கியதும், சிறிது சிறிதாக ரவையைச் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாகக் கிளறவும். ரவை தண்ணீர் முழுவதையும் உறிஞ்சி நன்றாக வேக வேண்டும். (தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டாமல் வரும்).
ரவை வெந்ததும் சிறிது சிறிதாக சீனியைத் தூவிவிட்டு கிளறிக் கொண்டே இருக்கவும். (சர்க்கரை முழுவதையும் மொத்தமாகச் சேர்த்தால் கேசரி கட்டி தட்டிவிடும்).