ரவா அவல் பாயசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவா - 1 கப்

அவல்- ஒரு கை

நெய் - 2 மேசைக்கரண்டி

தண்ணீர் - 3 கப்

பாசிப்பருப்பு - 1/2 கப்

வெல்லம் - 2 1 1/2 கப்

பால் - 1 கப்

தேங்காய்த்துருவல் - 1/2 கப்

ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி

நெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

ரவாவை நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.

பாசிப்பருப்பை மலர வேக வைக்கவும்.

அவலை கழுவி வைக்கவும்.

வெல்லத்தை சிறிது நீர் ஊற்றி கொதி வந்ததும் வடிகட்டி ஏலப்ப்டி சேர்த்து வைத்துக் கொள்லவும்.

தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.

கொதி வந்ததும் ரவாவை தூவி வேக வைக்கவும்.

வெந்து வரும்போது பயத்தம்பருப்பு, அவல் வெல்லம் சேர்க்கவும்.

மேலும் 2 கொதி வந்ததும் மற்ற பொருள்கள் அனைத்தும் சேர்த்து சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: