மைதா ஹல்வா செய்முறை

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1/4 கிலோ

சர்க்கரை - 1/2 கிலோ

நெய் - 1/2 கிலோ

ஏலக்காய் - 3

கேசரி கலர் - சிறிதளவு

பால் - ஒரு சிறு கரண்டி அளவு

முந்திரி பருப்பு - 50 கிராம்

செய்முறை:

மைதாவை நன்கு சலித்துக்கொண்டு தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.

அதிலேயே கலர் பொடியையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் ஏற்றி ஒருடம்ளர் தண்ணீர் ஊற்றிசர்க்கரையைப்போட்டுகரைய விடவும்.

சர்க்கரை கரைந்ததும் ஒருகரண்டி பாலை ஊற்றவும்.சர்க்கரையில் உள்ள அழுக்கு மேலாக நுரைத்து வரும். அதைக்கரண்டியால் எடுத்து விடவும்.

ஒருகம்பி பாகு பதம் வந்ததும் கரைத்துவைத்திருக்கும் மைதா கலவையை ஊற்றி, கை விடாமல் கிளறவும்.

கெட்டி ஆக,ஆக, நெய்யை கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றி கை விடாமல் கிளறிவிடவும்.

அல்வா பதம் வந்ததும், விட்ட நெய் கசிந்து வெளிவர ஆரம்பித்தவுடன்,

கீழே இற்க்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும். நன்கு ஆறியதும் வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.

குறிப்புகள்: