மைதா பணியாரம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1/4 கிலோ

முட்டை - 1

வாழைப்பழம் - 1

தேங்காய் துருவல் - 1/4 கப்

சீனி - 3/4 கப்

தண்ணீர் - 1/2 கப்

ஏலக்காய் - 3 (பொடியாக்கவும்)

எண்ணெய் - 1/4 லி

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

மைதா மாவில் வாழைப்பழத்தை பிசைந்து சேர்க்கவும்.

முட்டையை உடைத்து ஊற்றவும்.

தேங்காய்த்துருவல், ஏலக்காய், உப்பு, சீனி சேர்த்து தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி 4-5 நிமிடம் போல் காய வைக்கவும்

ஒரு கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.

ஒரு நிமிடம் கழித்து திருப்பிப் போட்டு மேலும் ஒரு நிமிடம் போல வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

ஒரு முறைக்கு 4-5 பணியாரங்கள் ஊற்றலாம்