மைசூர் பாக்
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
சூரியகாந்தி எண்ணெய் - 1 கப்
நெய் - 4 தேக்கரண்டி
தண்ணீர் - 3 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து சர்க்கரை உருகும் வரை கிளறவும். முழுவதும் உருகியதும் எண்ணெயையும் நெய்யையும் சேர்த்து கிளறவும். கடலை மாவை அரை தேக்கரண்டி நெய் சேர்த்து வறுத்து வைக்கவும்.
எண்ணெய் சிறிது சூடாகி கொதிக்க தயாரானதும் வறுத்த கடலை மாவை சிறிது சிறிதாக கொட்டி கிளறவும். கைவிடாமல் கிளற கிளற கட்டியில்லாமல் நெய் சர்க்கரையுடன் கரையும்
மாவை கிளறி தீயை மிதமாக வைக்க சிறிது நேரத்தில் கொதிக்கும் பின் நுரைக்கும்.
கைவிடாமல் கிளறி பின் அவை மெல்ல திரண்டு கரண்டு சுழற்றும் அதே போல மாவு திரண்டு உருளும் சட்டியில் ஒட்டாமல் வரும் பதம் வந்ததும் தீயை அணைத்து விட்டு நெய் தடவிய பரந்த ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.
சிறிது சூடாறியதும் வில்லைகள் போட்டு நன்கு ஆறியதும் கவிழ்த்து கொட்டி பரிமாறவும்.