மைசூர் பாகு (3)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1/4 கிலோ

சர்க்கரை - 3/4 கிலோ

நெய்/டால்டா - 3/4 கிலோ

சோடா மாவு - 1 சிட்டிகை

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு காய்ச்சி கம்பிபதம் வந்தவுடன் அதனுடன் கடலை மாவை ஒரு கையால் தூவிக் கொண்டே கட்டி சேராமல் கிளறிக் கொண்டே இருக்கவேண்டும்.

கூடவே நெய்யை கலவையில் விட்டு விட்டு கைவிடாமல் கிளறவேண்டும்.

நெய் அப்படியே மேலே வரும் போது சோடா மாவு போட்டு மீண்டும் கிளறி அடுப்பை அணைக்கவும்.

நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி கரண்டியால் சமப்படுத்தவும்.

ஆறும் முன் சதுரமான வடிவத்தில் வில்லைகளாக போடவும்.

குறிப்புகள்: