மைக்ரோ அவனில் பாசிப்பருப்பு அல்வா
0
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/4 கிலோ
சர்க்கரை - 350 கிராம்
ஏலக்காய் - 3
முந்திரி - 10
பால் - 100 மில்லி லிட்டர்,
நெய் - 100 மில்லி கிராம்.
செய்முறை:
பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து கரகரப்பாக அரைக்கவும்.
சர்க்கரையை மிக்சியில் பொடிக்கவும்.
அரைத்த பாசிப்பருப்பு, சர்க்கரை, பால், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கி, அவனில் 8 நிமிடம் வைக்கவும்.
இடையிடையே எடுத்து கிளறி விடவும்.
பாதி நெய்யை சேர்த்து 2 நிமிடம் வைக்கவும்.
மீதி நெய்யை சேர்த்து 3 நிமிடம் வைக்கவும்.
நெய்யில் வறுத்த முந்திரி தூவி கிளறவும்.
அல்வா பதம் வரவில்லையெனில் ஓரிரு நிமிடங்கள் மீண்டும் அவனில் வைத்து எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
நிமிடங்கள் அவனுக்கு அவன் நேரம் மாறுபடும்