மைக்ரோவேவ் பேஸன் லட்டு
0
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 3 கப்
சர்க்கரை (Powdered Sugar or Caster sugar) - 2 கப்
ஏலக்காய் தூள் - 2 தேக்கரண்டி
நெய் - 3/4 கப்
முந்திரி, திராட்சை - 1/4 கப்
செய்முறை:
கடலை மாவும், நெய்யும் கலந்து ஹை'ல் 1 நிமிடம் வைக்கவும்.
எடுத்து கிளரி மீண்டும் 2 நிமிடம் வைக்கவும். மீண்டும் கிளரி 2 நிமிடம் வைக்கவும்.
கலர் மாறி இருக்கும். இதை நல்லா ஆர விட்டு பொடித்த சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, திராட்சை கலந்து லட்டுகளாக (உருண்டைகளாக) பிடித்து வைத்து பரிமாறவும்.