மூங்தால் லட்டு
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கிலோ
சர்க்கரை - 1/2 கிலோ
ஏலக்காய் - 10
முந்திரி - 25 கிராம்
நெய் - 150 கிராம்
செய்முறை:
பாசிப்பருப்பை சிவக்க வறுக்கவும். ஆறியதும் மிஷினில் கொடுத்து நைசாக திரிக்கவும்.ஏலக்காய் + சர்க்கரையை மிஷினில் கொடுத்து நைசாக திரிக்கவும்
பாசிப்பருப்பு மாவு மற்றும் சர்க்கரை மாவை ஒன்றாக கலந்து சலித்துக் கொள்ளவும்
கடாயில் நெய் ஊற்றி முந்திரியை உடைத்துப்போட்டு வறுக்கவும்.
பின் அதை சலித்து வைத்துள்ள மாவில் ஊற்றி கிளறி சூடு ஆறுவதற்குள் லட்டுகளாக (உருண்டைகளாக) பிடித்து வைத்து பரிமாறவும்.