முந்திரி பர்பி (1)

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஒடித்த முந்திரிப்பருப்பு - 2 கப்

பொடித்த சர்க்கரை - 1 கப்

பால் - 1 கப்

நெய் - 1 கப்

ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

செய்முறை:

முந்திரிப் பருப்பை 2 - 3 மணி நேரம் பாலில் ஊற வைத்து, பின் நன்றாக அரைத்து எடுக்கவும்.

தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

வாணலியில் நெய் சேர்த்து முந்திரி விழுது, சர்க்கரை, ஏலக்காய் பொடி போடவும்.

நன்றாக கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.

பிறகு நெய் சேர்த்து, வாணலியில் ஓரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, நெய் தடவிய தாம்பாளத்தில் ஊற்றி, நன்றாக ஆறியவுடன் வில்லைகளாக போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: