முந்திரி தேங்காய் பர்பி
0
தேவையான பொருட்கள்:
முந்திரி - 10
தேங்காய் - 1 மூடி
சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய் - 3
நெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
முந்திரியை தேங்காயுடன் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் அரைத்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
நெய்யை ஊற்றி 15 நிமிடம் போல் கிளறினால் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.
அப்போது இறக்கி, தட்டில் கொட்டி சம படுத்தி வில்லைகளாக வெட்டவும்.