முந்திரி கோவா கேக்
2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
முந்திரி - 1/2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
நெய் - 1/2 கப்
பால் - 1/2 கப்
சர்க்கரை இல்லாத கோவா - 50 கிராம்
செய்முறை:
முந்திரியை பால் சேர்த்து அரைத்து கொள்ளவும். இதை ஒரு அகலமான பானில் மாற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். அரை வேக்காடானவுடன் கோவா சேர்த்து நன்கு கலக்கவும்.
பானில் ஒட்ட ஆரம்பிக்கும் போது பாதி நெய்யை சேர்க்கவும்.
முந்திரி முழுவதும் வெந்தபின் மீதமுள்ள நெய்யை சேர்த்து அடுப்பை அணைத்து ஆறவைக்க வேண்டும்.
பாதி ஆறியபின் துண்டுகள் போட்டு ஆறவிடவும்.