முந்திரி கேக் (2)
தேவையான பொருட்கள்:
முந்திரி - 100 கிராம் அல்லது 1 கப்
சர்க்கரை - 100 கிராம் அல்லது 1 கப்
தண்ணீர் - 1/2 கப்
நெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
முந்திரியை மிக்ஸியில் போட்டு சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும். நைசாக அரைக்க வேண்டாம்.
அடுப்பில் வாணலியை வைத்து சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
சர்க்கரை எவ்வளவு சேர்க்கின்றோமோ அதில் பாதி அளவு தண்ணீர் சேர்த்தால் பாகு பதம் சரியாக வரும்.
பதம் சரியாக வந்தவுடன் அரைத்த முந்திரியை சிறிது சிறிதாக கொட்டி கிளற வேண்டும். கை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
தோசை மாவு பதத்திற்கு சிறிது கெட்டியாக இருக்கும் பொழுது எடுத்து, நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியதும் வில்லைகளாக நறுக்கவும்.
குறிப்புகள்:
இந்த இனிப்பிற்கு நெய் தேவையில்லை. தட்டில் தடவுவதற்கு மட்டும் சிறிது நெய் இருந்தால் போதும்.