முந்திரி கேக் (1)

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முந்திரி - 500 கிராம்

சர்க்கரை - 750 கிராம்

நெய் - 250 கிராம்

ஜாதி பத்ரி - சிறிது

பால் - 50 மில்லி

செய்முறை:

முந்திரியை சிறிதாக கட் செய்து வெது வெதுப்பான நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்துக்கொள்ளவும்.

முந்திரி, ஜாதி பத்ரி , பால் சேர்த்து மிக்சியில் மைய அரைத்துக்கொள்ளவும் .

அடுப்பில் வாணலியை வைத்து அரைத்த முந்திரி விழுதையும் ,சர்க்கரையையும் சேர்த்து நன்கு கிளறவும் .

20 நிமிடங்கள் நன்கு கிளறிய பிறகு நெய் சேர்த்து மீண்டும் நன்கு கிளறி இறக்கவும்.

இதை ஒரு ட்ரேயில் ஊற்றி விருப்பமான வடிவில் வெட்டிக் கொள்ளலாம்.

குறிப்புகள்: