முக்கனி அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாம்பழத் துண்டுகள் - 2 கப்

பலாச்சுளை - 12

வாழைப்பழம் - 4

சர்க்கரை - 2 1/2 கப்

பால் - 2 கப்

முந்திரிப்பருப்பு - 10

திராட்சை - 8

ஏலப்பொடி - 1/4 தேக்கரண்டி

நெய் - சிறிது

செய்முறை:

நன்கு கனிந்த மாம்பழத்தினை அரிந்து இரண்டு கப் அளவிற்கு துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்.

வாழைப்பழத்தின் தோலுறித்து சிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும். அதேபோல் பலாச்சுளையையும் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் பாலையும் சர்க்கரையையும் போட்டு அதில் நறுக்கி வைத்துள்ள பழங்களையும் சேர்த்து அடுப்பில் வைத்து வேகவிடவும்.

தீயின் அளவு அதிகமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும். பொதுவாக எந்த வகை அல்வாவாயினும் அதனை நிதானமான தீயிலேயே கிளற வேண்டும்.

நன்கு கிளறிய பிறகு கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு அல்வா பதத்திற்கு வரும்போது முந்திரியை நெய்யில் வறுத்து பொடித்துப் போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: