மினப்ப உருண்டை
0
தேவையான பொருட்கள்:
உளுந்தம் பருப்பு - 2 கப்
சக்கரை - 1 1/2 கப்
ஏலக்காய் - 2
நெய் - உருண்டை பிடிக்க தேவையான அளவு
செய்முறை:
உளுந்தம்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வருக்கவும்.
சக்கரை,ஏலக்காய் ஆகியவற்றை பொடித்து கொள்ளவும்.
உளுந்து ஆறிய உடன் மிக்சியில் நைசாக பொடித்துக்கொள்ளவும்.
பொடித்த சக்கரை, உளுந்தை நன்கு கலந்துவைத்துக்கொண்டு, நெய்யை காய்த்து மாவில் ஊற்றி உருண்டை பிடிக்கவும்.