மாவுருண்டை
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப்
பொட்டுக்கடலை - 1 கப்
சீனி (பொடித்தது) - ஒரு கப் மாவிற்கு அரை கப் பொடித்த சீனி
நெய் - தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பை நன்றாக சிவக்க வறுத்து ஆற விடவும்.
ஆறியதும் பாசிப்பருப்பை மாவாக அரைத்துக் கொள்ளவும்.
பொட்டுக்கடலையை மாவாக அரைத்து பாசிப்பருப்பு மாவுடன் கலக்கவும். இப்பொழுது மாவுருண்டை மாவு தயார்.
இந்த மாவுக் கலவையிலிருந்து ஒரு கப் மாவிற்கு அரை கப் பொடித்த சீனி மற்றும் இரண்டு மேசைக்கரண்டி நெய் சேர்த்து சிறுதீயில் வறுக்கவும். மாவில் நன்கு சூடு ஏறியதும் இதுபோல் ஒரு சிறிய கிண்ணத்தில் மாவை எடுத்து அச்சுகளாக செய்யலாம்.
உருண்டையும் பிடித்து வைக்கலாம்.
குறிப்புகள்:
பொட்டுக்கடலை சேர்க்காமல் பாசிப்பருப்பில் மட்டும் கூட இதைச் செய்யலாம். காரைக்குடி பக்கம் இது மிகவும் பிரபலம்.