மாம்பழ அல்வா
0
தேவையான பொருட்கள்:
மாம்பழத் துண்டுகள் - 3 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - 2 கப்
நெய் - 1/2 கப்
ஏலப்பொடி - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
மாம்பழம் நல்ல சுவையானதாய், கனிந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். மாம்பழத் துண்டுகளை நன்கு மசித்துக் கொள்ளவும்.
மசித்த மாம்பழத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சர்க்கரையும், பாலையும் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
சர்க்கரை பாகாக கரைந்து, மாம்பழத் துண்டுகளுடன் சேர்ந்து கலவையாய் வரும்போது, ஏலப்பொடி சேர்த்து, நெய்யை ஊற்றி கிளற வேண்டும்.
அல்வா பதத்திற்கு வந்தவுடன் இறக்கி ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி, ஆறியபிறகு துண்டுகளாய் வெட்டி பரிமாறவும்.