மாம்பழப்பால் பாயாசம்
0
தேவையான பொருட்கள்:
பால் - 6 கப்
பாசுமதி அரிசி - 1/3 கப்
ஸ்வீடென்டு கன்டென்ஸ்டு மில்க் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - சிறிது
சிட்டிகை உப்பு - சிறிது
கொட்டை நீக்கி, தோல் நீக்கிய மாம்பழ துண்டுகள் - 2 கப்
செய்முறை:
அரிசி கழுவி வைக்கவும்.
பால் கொதிக்கவிட்டு அரிசி சேர்க்கவும்.
சாதம் வெந்து, பால் கெட்டியாக வேண்டும். மிதமான தீயில் சுமார் 40 நிமிடம் அடுப்பில் வைத்து கிளரவும்.
இதில் ஸ்வீடென்டு கன்டென்ஸ்டு மில்க், ஏலக்காய், உப்பு சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கலக்கவும்.
இதை கப்'ல் ஊற்றி, மேலே மாம்பழ துண்டுகள் போட்டு பரிமாறவும்.