மரவள்ளிக்கிழங்கு இனிப்பு போண்டா
2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 1 (சிறியது)
வாழைப்பழம் - 1
அரிசி மாவு - 1/2 கப்
சீனி - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
பிரட் கிரம்ஸ் - 1/4 கப்
ஏலக்காய் - 2
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
கிழங்கின் தோலை நீக்கி விட்டு உப்பு சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.
வேக வைத்த கிழங்குடன் வாழைப்பழத்தையும் சேர்த்து கட்டியில்லாமல் பிசைந்துக் கொள்ளவும்.
பின்பு அதனுடன் அரிசி மாவு, சீனி, ப்ரெட் கிரம்ஸ் மற்றும் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
எல்லாம் ஒன்றாக சேரும்படி நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் மாவிலிருந்து சிறு உருண்டைகளாக செய்து எண்ணெயில் போடவும்.
தீயை மிதமான வைத்து பொன்னிறமாக ஆனதும் எடுத்து பரிமாறவும்.