ப்ரெட் ஹல்வா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரெட் - 1 பாக்கெட்

நெய் - 1 கப்

பால் - 1 லிட்டர்

சர்க்கரை - 4 கப்

முந்திரி - 100 கிராம்

திராட்சை - 100 கிராம்

எண்ணெய் - 100 கிராம்

செய்முறை:

ப்ரெட்டை சிறு சிறு ஸ்லைஸாக கட் செய்து கொள்ளவும். எண்ணெயில் அதனை வறுத்து எடுத்து கொள்ளவும்.

முந்திரி மற்றும் திராட்சையை ஒரு தேக்கரண்டி நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவும்.

பாலை சுண்ட காய்ச்சுக் கொண்டு சர்க்கரையை சேர்த்து கிளறி விடவும். அதனுடன் முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கிளறவும். நெய்யை உருக்கி பாலுடன் சேர்க்கவும்.

பிறகு ப்ரெட் துண்டுகளை சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.

குறிப்புகள்: