ப்ரெட் ஹல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரெட் - 1 1/2 பாக்கெட்

பால் - 1 லிட்டர்

ஏலக்காய் - 3

பாதம் - 50 கிராம்

முந்திரி - 150 கிராம்

சர்க்கரை - 1/2 கிலோ

நெய் - 25 கிராம்

டால்டா (அல்லது) நெய் - ப்ரெட் பொரிக்க தேவையான அளவு

கேசரி கலர் - ஒரு பின்ச்

செய்முறை:

ப்ரெட்டை டால்டாவில் பொரித்து நல்ல உதிர்த்து வைத்து கொள்ள வேண்டும்.

பாலில் ஏலக்காய் சேர்த்து சிறிது வற்றும் அளவுக்கு நன்கு காய்ச்ச வேண்டும்.

முந்திரியில் மூன்றில் இரண்டு பங்கும், பாதாமை வெந்நீரில் போட்டு தோலுரித்து எடுத்து இரண்டையும் அரைத்து ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்

பால் நன்கு கொதிக்கும் போது உதிர்த்து வைத்துள்ள ப்ரெட்டை போட்டு கிளறி, அரைத்து வைத்துள்ள பாதாம், முந்திரியையும் போட்டு கிளறி சர்க்கரை சேர்த்து கேசரி பொடியும் கலக்கி ஊற்றி நன்கு ஹல்வா பதத்துக்கு கிளறி கடைசியில் மீதி உள்ள முந்திரியை நெய்யில் வறுத்து கொட்டி கிளறி இருக்க வேண்டும்.

குறிப்புகள்: