ப்ரெட் ஸ்வீட் பால்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரெட் - 10

கன்டண்ஸ்டு மில்க் - 1/2 கப்

கோகனெட் பவுடர் - 1/4 கப்

வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி

உடைத்த முந்திரி - சிறிது

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

ப்ரெட்டின் ஓரங்களை நறுக்கி விட்டு சிறிய துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ளவும். (விரும்பினால் ப்ரெட்டை மிக்ஸியில் போட்டு தூள் செய்து கொள்ளலாம்).

ப்ரெட் துண்டுகளுடன் கோகனெட் பவுடர், முந்திரி, கன்டண்ஸ்டு மில்க் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள ப்ரெட் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

இதன் சுவை கிட்டத்தட்ட குலோப் ஜாமுன் சுவை போல இருக்கும்.

குறிப்புகள்: