பொரி மாவு
0
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 படி (வறுத்து அரைத்தது)
பொட்டுக்கடலை மாவு - 1/2 படி
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
வெல்லப்பாகு - தேவையான அளவு (1 கிலோ)
முந்திரி - 100 கிராம் (நெய்யில் வறுத்தது)
செய்முறை:
வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டவும். அதில் ஏலப்பொடியை கலக்கவும்.
பின் அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவை நன்கு கலந்து அதில் வெல்லப்பாகை கொஞ்சமாக ஊற்றி முந்திரியை போட்டு உருண்டையாக பிடிக்கவும்.
குறிப்புகள்:
ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது.