பொரி உருண்டை (1)
0
தேவையான பொருட்கள்:
அவல்பொரி - 6 கப்
வேர்க்கடலை - 2 கப்
வெல்லம் - 3/4 கிலோ
ஏலப்பொடி - 1 பின்ச்
சுக்கு - 1 பின்ச்
நல்லெண்ணெய் - சிறிது
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு கப் நீரில் வெல்லத்தைக் கரைய விடவும்
வடிகட்டி அடுப்பில் வைக்கவும்.ஏலப்பொடி,சுக்குப்பொடி,நெய் சேர்க்கவும்.
பாகு உருட்டுபதம் வந்ததும்,பொரி,தோல் நீக்கிய வேர்க்கடலை சேர்த்து கம்பால் கிளறி கையில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு சூடு ஆறும் முன்னரே சிறிய உருண்டைகள் பிடிக்கவும்.