பைனாப்பிள் கேசரி செய்முறை
0
தேவையான பொருட்கள்:
பைனாப்பிள் - 1
ரவை - 1/4 கிலோ
ஜீனி - 200 கிராம்
டூட்டி ப்ரூட்டி - 50 கிராம்
நெய் - 100 மில்லி
மஞ்சள்கலர் - சிறிது
தண்ணீர் - 300 மில்லி
உப்பு - கால் தேக்கரண்டி
செய்முறை:
ரவையை பச்சை வாசனை போக வறுத்து தனியே வைக்க வேண்டும்.
பைனாப்பிளை மிக்சியில் அரைத்து 200மில்லி ஜூஸ் எடுத்து வைக்க வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து 300மில்லி தண்ணீர் ஊற்றி அதனுடன் மஞ்சள்கலர்,200 கிராம் ஜினி, 100நெய்,டூட்டி ப்ரூட்டி,அனைத்தையும் சேர்த்து கரண்டியால் கிண்டி கொதிக்க விட வேண்டும்.
உப்பு சேர்த்த ஜூஸை அதனுடன் சேர்த்து கலவை கொதிக்கும் போழுது ரவையை போட்டு கட்டி இல்லாமல் கிளறி இறக்கி பரிமாறவும்.