பெங்காலி மில்க் ஸ்வீட்
தேவையான பொருட்கள்:
பால் - 2 லிட்டர்
சர்க்கரை - 400 கிராம்
தண்ணீர் - 1 1/2 கப்
மைதா - 1 தேக்கரண்டி
சீவிய பிஸ்தா - 1/2 மேசைக்கரண்டி
சீவிய பாதாம் - 1/2 மேசைக்கரண்டி
வினிகர் - 2 தேக்கரண்டி
குங்கும்ப்பூ - ஒரு சிட்டிகை
செய்முறை:
ஒரு லிட்டர் பாலை அடுப்பில் வைத்துக் காய்ச்சவும்.
அதனுடன் 200 கிராம் சர்க்கரையை சேர்த்து பால் பாதியளவு ஆகும் வரை கொதிக்கவிடவும்.
பிறகு அதனை அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் தூள், சூடான பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
மீதமுள்ள ஒரு லிட்டர் பால் கொதிக்கும் போது அதில் வினிகரை சேர்க்கவும். உடனே பால் திரிந்துவிடும்.
திரிந்த பாலை சாதாரண வடிகட்டியில் வடிகட்டவும். அதனை ஒரு தட்டில் கொட்டிக்கொண்டு, மைதா சேர்த்து நன்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
பிறகு குக்கரில் தண்ணீரையும் 100 கிராம் சர்க்கரையையும் சேர்க்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, சர்க்கரை கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போடவும்.
மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். பின்னர் வெந்திருக்கும் உருண்டைகளை எடுத்து, லேசாக அழுத்திப் பிழிந்து காய்ச்சி வைத்துள்ள பாலில் போடவும். ஊறியவுடன் பரிமாறவும்.