பூரண சீனி போளி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்

அரிசி மாவு - 1/2 கப்

நெய் - 1/4 கப்

பூரணத்திற்கு:

சீனி - 2 கப்

ஏலப்பொடி- 1/4 தேக்கரண்டி

வறுத்த கசகசாப்பொடி - 1/4 கப்

வறுத்த பயத்தம் பருப்புப்பொடி- 1/4 கப்

பொட்டுக்கடலை பொடி- 1/4 கப்

செய்முறை:

மாவுகளை முதலில் நெய் கலந்து பிசிறிக்கொண்டு, பிறகு தண்ணீரைத் தெளித்து தெளித்து சப்பாத்தி மாவு போல மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும்.

பூரணத்திற்கு முதலில் சீனியைப் பொடித்துக் கொண்டு அனைத்து பொடிகளையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்த மாவில் சிறிய மெல்லிய சப்பாத்திகள் செய்யவும்.

ஒரு சப்பாத்தி மேல் பூரணத்தை இலேசாக பரப்பி இன்னொரு சப்பாத்தியால் மூடவும்.

ஒரங்களை நன்கு ஒட்டவும்.

சூடான தோசைக்கல்லில் போட்டு இரு புறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: