பூரணக் கொழுக்கட்டை

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு - 1 கப்

உருண்டை வெல்லம் - 1/2 கப்

தேங்காய் - ஒரு மூடி

உப்பு - 1/4 தேக்கரண்டி

உருக்கிய நெய் - 2 தேக்கரண்டி

ரீஃபைண்ட் ஆயில் - 2 தேக்கரண்டி

ஏலக்காய்ப் பொடி - சிறிது

கொழுக்கட்டை அச்சுக்கள்

செய்முறை:

தேவையானப் பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

வெல்லத்தை தூள் செய்து கொள்ளவும், தேங்காயைத் துருவி, ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது நெய் ஊற்றி தேங்காய் துருவலைப் போட்டு வாசனை வரும் வரை வதக்கவும்.

அதனுடன் வெல்லத்தையும் சேர்த்து மிதமான தீயில் வைத்து, வெல்லம் இளகி தேங்காயுடன் சேரும் வரை கிளறவும். பிறகு ஏலக்காய்ப் பொடியையும் சேர்த்துக் கிளறிவிடவும். பூரணம் தயார்.

அகலமான பாத்திரத்தில் பச்சரிசி மாவுடன் உப்பு போட்டு, தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து சிறிது சிறிதாக மாவில் ஊற்றி கரண்டிக் காம்பால் நன்கு கிளறவும். மாவு கொழுக்கட்டை உருட்டும் பதத்திற்கு வரும் வரை கிளறவும். (ஒரு கப் மாவிற்கு இரண்டு கப் தண்ணீர்).

தயார் செய்துள்ள பூரணத்தை நெல்லிக்காய் அளவில் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

பிசைந்த பச்சரிசி மாவை சற்று பெரிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

கையில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு பச்சரிசி மாவு உருண்டையை உள்ளங்கையில் வைத்து தட்டை போல மெல்லியதாகத் தட்டி, கொழுக்கட்டை அச்சில் வைத்து, அதன் நடுவில் பூரணத்தை வைத்து, நன்றாக அழுத்தி மூடவும்

இதேபோல் அனைத்து உருண்டைகளையும் தட்டை போல தட்டி, பூரணத்தை உள்ளே வைத்து கொழுக்கட்டைகளாகத் தயார் செய்து, இட்லித் தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: