பூந்தி பாயாசம்
1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பூந்தி (உப்பு, காரம் இனிப்பு இல்லாத) - 1 கப்
பால் - 1/2 லிட்டர்
முந்திரி, திராட்சை - சிறிது
சர்க்கரை - 1 1/2 கப்
ஏலக்காய் - 2
நெய் -2 தேக்கரண்டி
செய்முறை:
உப்பு, காரம் இனிப்பு எதுவும் இல்லாத பூந்தியை எடுத்துகொள்ளவும்.பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
காய்ச்சிய பாலில் சக்கரையை போட்டு கரைந்ததும்,பூந்தியை போட்டு ஒரு நிமிடம் வேக விடவும்.
ஏலப்பொடி மற்றும் நெய்யில் வருத்த முந்திரி திராட்சை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.