பூசணிக்காய் (காசி) அல்வா
0
தேவையான பொருட்கள்:
துருவிய பூசணிக்காய் - 3 கப்
சக்கரை - 1 1/2 கப்
ஏலக்காய் - 6 பொடித்துக் கொள்ளவும்.
மஞ்சள் பொடி அல்லது கலர் பொடி - 1 சிட்டிகை
பாதாம் மிக்ஸ் – 2 தேக்கரண்டி
முந்திரி – 10
நெய் – 5 தேக்கரண்டி
செய்முறை:
துருவிய பூசணிக்காயை கடாயில் போட்டு சிறு தீயில் வேகவிடவும்.
பூசணிக்காயே தண்ணிர் விடும் என்பதால் மேலும் தண்ணிர் விட வேண்டாம். பச்சை வாசனை இல்லாமல் நன்கு வெந்த பின், சக்கரை போட்டு கிளரவும்.
மஞ்சள் பொடி அல்லது கலர் பொடி சேர்க்கவும்.
சக்கரை பூசணிக்காயுடன் நன்கு சேர்ந்த பின், நெய் ஊற்றி கிளரவும்.
பிறகு பாதாம் மிக்ஸ், ஏலக்காய் சேர்த்து, முந்திரியையும் நெய்யில் வருத்து சேர்த்து கலக்கவும்.