பூசணிக்காய் அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துருவி, முழுவதுமாக நீரைப்பிழிந்தெடுத்த பூசணித்துருவல் - 4 1/2 கப்

சீனி - 3 1/2 கப்

ஏலக்காய் - 8

நெய் - 3/4 கப்

பால் - 1 கப்

மெலிதாக அரிந்த பிஸ்தா, பாதாம் துருவல்கள்- 2 மேசைக்கரண்டி

குங்குமப்பூ- ஒரு சிட்டிகை

செய்முறை:

ஒரு மேசைக்கரண்டி பாலில் குங்குமப்பூவை ஊறவைக்கவும்.

ஒரு மேசைக்கரண்டி சீனியில் ஏலத்தைச் சேர்த்து பொடிக்கவும்.

மீதிப்பாலை பூசணித்துருவலில் சேர்த்து 15 நிமிடங்கள் ஆவியில் வைக்கவும்.

வெந்த பின் ஆறவிட்டு, அதன் பின் மிக்ஸியில் அரைத்துக்கொள்லவும்.

வாணலியை சூடாக்கி சீனி, சிறிது நீர் சேர்த்து கம்பிப்பாகு காய்ச்சவும். பூசணி விழுதைச் சேர்த்து மிதமான தீயில் சமைக்கவும்.

இடையிடையே நெய் சிறிது சிறிதாக ஊற்றிக்கொண்டே கிளறியவாறே இருக்கவும்.

ஒட்டாத பதம் வந்ததும் குங்குமப்பூப் பால், ஏலம் சேர்த்துக் கிளறவும்.

ஒரு சில நிமிடங்களில் நெய் தடவிய தட்டில் கொட்டி சமனப்படுத்தி, பாதாம்-பிஸ்தா துருவல்களைத் தூவவும்.

குறிப்புகள்: