புட்டிங்
தேவையான பொருட்கள்:
கன்டன்ஸ்ட் மில்க் (சீனி சேர்க்காதது) - 3/4 கப்
தேங்காய் பால் - 1/2 கப் (முதல் பால்)
முட்டை - 3
கஸ்டர்ட் பவுடர் - 2 தேக்கரண்டி
சீனி - 200 கிராம் + 4 மேசைக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
தட்டையான ஒரு பாத்திரத்தில் 4 மேசைக்கரண்டி சீனியை போட்டு, மிதமான தீயில் வைத்து ப்ரௌன் கலரில் வரும்போது வெனிலா எசன்ஸ் சேர்த்து முறுகிய உடன் அடுப்பை அணைத்துவிடவும். அந்த முறுகிய பாகு எல்லா இடத்திலும் பரவும்படி செய்யவும்.
முட்டையை நன்கு கலக்கி அதனுடன் கஸ்டர்ட் பவுடர் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். பின் சீனி, கன்டன்ஸ்ட் மில்க், தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
கலந்து வைத்துள்ள கலவையை கேரமல் செய்து வைத்துள்ள பாத்திரத்தில் ஊற்றவும்.
ஒரு சட்டியில் கால் பங்கு தண்ணீர் ஊற்றி அதனுள் ஒரு கலவடையை வைத்து அதன் மேல் கலந்து வைத்துள்ள கலவை பாத்திரத்தை வைத்து மூடவும்.
15 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும். கத்தியை உள்ளே விட்டு எடுத்தால் சுத்தமாக வரும்.
ஆறியவுடன் ஒரு தட்டில் கவிழ்த்தால் மேலே ப்ரவுனாகவும், உள்ளே மஞ்சளாகவும் இருக்கும்.
சுவையான புட்டிங் ரெடி. விருப்பத்திற்கேற்ப துண்டுகள் போட்டு பரிமாறவும்.