பீட்ரூட் ஹல்வா

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் (துருவியது) - 1 கப்

பச்சை பால் - 2 கப்

சர்க்கரை (அல்லது) சுகர் ப்ரீ - 1/2 கப்

நெய் - 4 மேசைக்கரண்டி

முந்திரி - 1 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு அடிகனமான பாத்திரத்தில் கொடுத்துள்ளவற்றில் பாதி அளவு பால் விட்டு காய்ந்ததும் பீட்ரூட் சேர்த்து மீதம் உள்ள பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக விடவும்.

நன்றாக வெந்ததும் பால் வற்றி இரண்டும் சேர்ந்து கொதிக்கும். கிளறிக்கொண்டே இருக்கவும்.

கொஞ்சம் கெட்டி ஆக ஆரம்பித்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து எல்லாம் ஒன்று சேரும் வரை கிளறவும்.

அல்வா பதம் வர ஆரம்பித்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

துருவிய முந்திரி மற்றும் தேவைப்பட்டால் ஒரு பின்ச் சினமன் பௌடர் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: