பீட்ரூட் அல்வா (3)
0
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 500 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
நெய் - 100 கிரம்
திராட்சை - 50 கிராம்
முந்திரி - 50 கிராம்
ஏலக்காய் - 5
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
பீட்ரூட்டின் தோலை சீவி சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும். பிறகு நறுக்கிய பீட்ரூட்டை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி அதில் முந்திரி, ஏலக்காய் மற்றும் திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும்.
அரைத்த பீட்ரூட்டை நெய்யில் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் அதனுடன் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
வறுத்த முந்திரி, ஏலக்காய் மற்றும் திராட்சையை அதனுடன் சேர்த்து கிளறவும்.