பீட்ரூட் அல்வா (1)
0
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1/4 கிலோ
சர்க்கரை - 200 கிராம்
பால் - 1/4 லிட்டர்
ஏலக்காய் - 3
முந்திரி - 10
பாதாம் - 5
நெய் - 1/4 கப்
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
பீட்ரூட்டை துருவி பாலுடன் சேர்த்து வேக வைக்கவும்.
பீட்ரூட் வெந்ததும் உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறவும்.
நன்கு கெட்டியாக வரும் போது நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். அல்வா பதம் வந்ததும் இறக்கவும். நெய்யில் முந்திரி, பாதாம் வறுத்து தூவி கிளறவும்.