பிஸ்கெட் அல்வா
2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
மில்க் பிஸ்கட் - 10
பால் - 1/4 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 1/2 கப்
முந்திரி தூள் (வறுத்து பொடித்தது) - 1/4 கப்
செய்முறை:
முதலில் பிஸ்கட்களை தூளாக பொடிக்கவும்.
பின் முந்திரிப்பருப்புகளை கொஞ்சம் எடுத்து வறுத்து பொடிக்கவும்
பின் வாணலியில் பொடித்த தூள்கள், பால், சர்க்கரை, நெய் விட்டு மிதமான தீயில் அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.