பிரட் லட்டு

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு - 100 கிராம்

பிரட் ஸ்லைஸ் (துண்டுகள்) - 6

வெல்லம் - 1/4 கிலோ

தேங்காய் - 1/4 மூடி

ஏலக்காய் - 4

நெய் - 50 கிராம்

செய்முறை:

கடலை பருப்பை கிள்ளு பதமாக வேக வைத்து, தண்ணீரை சுத்தமாக் வடித்து, மிக்ஸியில் உதிராக அரைத்து சிறிது நெய்யில் வதக்கிக் கொள்ளவும்.

தேங்காயை துருவி, சிறிது நெய்யில் லேசாக வறுத்து வைக்கவும்.

பிரெட்டை மிக்ஸியில் போட்டு ஓட்டினால பொலபொலன்னு வரும். அதையும் சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

வெல்லத்தை தட்டி, சிறிது தண்ணீரை சேர்த்து, கரைத்து, வடிகட்டி அடுப்பில் வைக்கவும்.

கொதிக்கும் போது, அரைத்த கடலை பருப்பு, பிரட்,தூளாக்கிய ஏலக்காய், தேங்காய், மீதி நெய் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.

ஆறியவுடன் எழுமிச்சை அளவு லட்டுகளாக (உருண்டைகளாக) பிடித்து வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: