பால் பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கிலோ
வெல்லம் - 3/4 கிலோ
பாசிபருப்பு - 1/4 கிலோ
கல்கண்டு - 200 கிராம்
கடலை பருப்பு - 100 கிராம்
வறுத்து தோல் நீக்கிய வேர்கடலை - 100 கிராம்
முந்திரி பருப்பு - 100 கிராம்
உலர்ந்த திராட்சை - 100 கிராம்
துருவிய தேங்காய் - 1 மூடி
பால் - 1/2 லிட்டர்
ஏலக்காய் - 10
நெய் - 100 கிராம்
உப்பு - சிறிதளவு
பச்சை கற்பூரம் - சிறிதளவு
செய்முறை:
அரிசியை களைந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பாசிபருப்பு, கடலை பருப்பு, முந்திரி பருப்பு மூன்றையும் நெய்யில் வறுக்கவும்.
பானையில் தண்ணீர் விட்டு கொதித்ததும் அரிசியை போடவும்.
பிறகு பாசிபருப்பு, கடலை பருப்பை போட்டு வேகவிடவும்.
வெல்லத்தை அதிகம் தண்ணீர் சேர்க்காமல் லேசாக வடிகட்டி அரிசி வெந்ததும் ஊற்றி நன்கு கிளறவும்.
சோறு சற்று கெட்டியானதும் பாலை ஊற்றி, துருவிய தேங்காய், கல்கண்டு,முந்திரி பருப்பு, வேர்கடலை, உலர்ந்த திராட்சை, ஏலத்தூள், பச்சை கற்பூரம், நெய், சிறிது உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.