பால் பாயசம்
2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒரு கை
பால் - 2 லிட்டர்
சீனி - தேவைப்படும் அளவு
குங்குமப்பூ - 1 சிட்டிகை
ஏலப்பொடி - 1/4 தேக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரிப்பருப்பு,
செய்முறை:
பச்சரிசியை நெய்யில் குறைந்த தீயில் சற்று சிவக்கும்வரை வறுக்கவும்.
அதைப் பிறகு பாலில் குங்குமப்பூவுடனும் ஏலப்பொடியுடனும் சேர்த்து 3 விசில் வரை குக்கரில் வேகவைக்கவும்.
பிறகு தீயை நன்கு குறைத்து 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
பிறகு வெந்ததை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
சுவைக்குத்தேவையான சீனியைச்சேர்த்து, சற்று கொதிக்க விட்டு விரும்பிய பதத்தில் இறக்கவும்.
வறுத்த திராட்சை, முந்திரிப்பருப்புகளைச் சேர்த்து பரிமாறவும்.