பால் பணியாரம் (6)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ

பால் - 1/2 லிட்டர்

சர்க்கரை - 25 கிராம்

நல்லெண்ணெய் - 3/4 லிட்டர்

உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

உளுந்தை 4 மணிநேரம் ஊற வைத்து வடை மாவுக்கு அரைப்பது போல் நைசாக உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பாலை நன்றாக பொங்கக் காய்த்து அதில் சர்க்கரை சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடு வந்ததும் அரைத்த உளுந்தம் மாவை சிறு உருண்டைகளாக்கி எண்ணெயில் போடவும்.

உருண்டை சிவந்து வந்து வெந்தவுடன் அதை எண்ணெய் இன்றி அரித்து எடுத்து உருண்டைகளை பாலில் போட்டு அரை மணிநேரம் ஊறிய பின்னர் பரிமாறவும்.

குறிப்புகள்: