பால் பணியாரம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுந்து - 100

பச்சரிசி - 100

ரவை - 25 கிராம்

சோடா உப்பு - சிறிதளவு

தேங்காய் - 1

சீனி - தேவைக்கு

ஏலக்காய் தூள் - சிறிதளவு

வாழை பழம் - 2

எண்ணெய் - பொரிக்க தகுந்த அளவு

உப்பு - தேவைக்கு

செய்முறை:

பச்சரிசியும் உளுந்தும் தனிதனியே முறையாக 4 மணிநேரம் மற்றும் அரைமணிநேரம் ஊற வைத்து பின் நைஸாக அரைக்கவும்.

ரவையை தண்ணீர் ஊற்றி அரைமணி நேரம் ஊறவிடவும்.

அரைத்த மாவு மற்றும் ரவையில் உப்பு, ஏலக்காய் பொடி, சோடா உப்பு சேர்த்து 4 மணிநேரம் ஊறவிடவும்.

பின் எண்ணெயில் பொரித்து எண்ணெய் இல்லாமல் வடித்து எடுக்கவும்

தேங்காய் துருவலில் சுடுநீர் ஊற்றி ஆறியதும் அரைத்து பால் எடுத்து வைக்கவும்

பின் சீனி,ஏலத்தூள், வட்டவடிவில் நறுக்கிய வாழைப்பழம்,சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

பொரித்த பணியாரங்களை அதில் சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: