பால் கோவா

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பால் - ஒரு லிட்டர் (திக்கான பால்)

சீனி - 200 கிராம் (ஒரு கப் அளவை விட சிறிது குறைவு)

ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை

நெய் - 3 தேக்கரண்டி

செய்முறை:

அகலமான பெரிய நாண் ஸ்டிக் பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, பால் மூன்றில் ஒரு பங்காக வற்றும் வரை நன்றாகக் காய்ச்சவும். (ஒரு மரக் கரண்டியால் பாத்திரத்தின் ஓரங்களில் படியும் பாலாடையை வழித்து பாலில் சேர்த்துவிட்டு, அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும். பால் நன்றாக வற்றுவதற்கு 30 - 40 நிமிடங்கள் ஆகக் கூடும்).

பால் நன்கு வற்றியவுடன் சீனியைச் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். சீனி கரைந்து பால் கெட்டியானதும், நிறம் மாறி வரும்.

பால் கோவா வாசனை நன்றாக வரும் போது நெய் சேர்த்துக் கிளறி, பிறகு ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்துக் கிளறவும்.

நன்கு கெட்டியாகி பால் கோவா பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

நம் விருப்பத்திற்கேற்ப பொடித்த பாதாம் பருப்பு அல்லது வறுத்த முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் மற்றும் டூட்டி ஃப்ரூட்டியை மேலே தூவி அலங்கரிக்கலாம்.

குறிப்புகள்:

பால் கொதிக்கும் போது அளவு குறையுமே தவிர, கெட்டியாகாது. சீனி சேர்த்த பிறகு தான் கெட்டியாகும்.

நாண் ஸ்டிக் தவாவில் செய்வது மிகவும் எளிது. அடி பிடிக்காமல் நன்றாக வரும்.