பால் கொழுக்கட்டை (8)
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
வெல்லத் தூள் - ஒரு கப்
ஏலக்காய் - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
தேங்காய் பால் - 1/2 கப்
தண்ணீர் - 1 1/2 கப்
செய்முறை:
முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதை பச்சரிசி மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, கிளறி சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
ஒன்றரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உருண்டைகளை போட்டு 5 நிமிடம் வேகவைக்கவும்.
வெந்த கொழுக்கட்டைகளை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அந்த தண்ணீரில் வெல்லம், ஏலக்காய், உப்பு, சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு அதில் எடுத்து வைத்துள்ள கொழுக்கட்டையையும், தேங்காய் பாலையும் சேர்த்து கிளறி இறக்கவும். நன்றாக ஆறியபின் பரிமாறவும்.