பால் கொழுக்கட்டை (6)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/4 கிலோ
சர்க்கரை - 1/4 கிலோ
பசும்பால் - 2 கோப்பை
தண்ணீர் - 2 கொப்பை
ஏலப்பொடி - 1/4 தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
உப்புத்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:
பச்சரிசியை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து இட்லிக்கு அரைப்பதை போன்று அரைத்து ஒரு கரண்டி மாவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு அரைத்த மாவில் உப்பைச் சேர்த்து ஒரு கெட்டியான துணியில் ஊற்றி மூட்டையாக சுருட்டி ஒரு பாத்திரத்தில் வைத்துவிடவேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து பார்த்தால் மாவிலுள்ள நீர் அனைத்தும் துணியால் உறிஞ்சப்பட்டு மாவு கட்டியாக மாறி இருக்கும்.மாவு தளர்ந்த நிலையில் இருந்தால் சிறிது மைதாவை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
இந்த மாவினை நம் சுண்டுவிரல் நிளத்திற்கு கொழுக்கட்டைகளாக உருட்டி வைக்கவும்.
பிறகு ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாலையும் தண்ணீரையும் சேர்த்து ஊற்றி பட்டை துண்டை போட்டு நன்கு கொதிக்கவிட்டு சர்க்கரையை கொட்டி நன்கு கரையவிடவும்.
பிறகு தயாரித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளில் பாதியைப் போட்டு வேகவிடவும்.அவை வெந்து மிதக்க ஆறம்பிக்கும் பொழுது மீதமுள்ள கொழுக்கட்டைகளையும் போட்டு வேகவிடவும்.
அனைத்தும் வெந்தவுடன் எடுத்து வைத்துள்ள மாவை சிறிது குளிர்ந்த நீரை ஊற்றி கரைத்து ஊற்றி நன்கு கலக்கி விடவும்.
எல்லாம் வெந்து தயாரானதும் ஏலப்பொடியை தூவி இறக்கி பரிமாறவும்.