பால் கொழுக்கட்டை (5)

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 2 டம்ளர்

வெல்லம் - 1/4 கிலோ

தேங்காய் - 1 மூடி

ஏலக்காய் - 5

உப்பு - சிறிது

செய்முறை:

அரிசியைக் கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

தேங்காயை துருவி கெட்டியான பால் எடுத்து வைக்கவும்.

வெல்லத்தை தட்டி தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.

அரிசியை கிரைண்டரில் போட்டு, கெட்டியாக, நைசாக உப்பு சேர்த்து அரைக்கவும்.

அரைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாகவும், சிறு குழல் போலவும் (சிறிது மாவை உள்ளங்கையில் வைத்து ஒரு விரலால் தேய்த்தால் வரும்) செய்து 30 நிமிடங்கள் உலர விடவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தில் 1/2 லிட்ட்ர் தண்ணீர் வைத்து நன்கு கொதிக்கும் போது உருண்டைகளை சிறிது சிறிதாக அதில் போடவும்.

கொழுக்கட்டைகள் வெந்து மேலே மிதக்கும். அப்போது வடிகட்டிய வெல்ல நீரை ஊற்றவும்.

5 நிமிடம் கொதித்தப் பின் ஏலக்காயை பொடி செய்து, தூவி, தேங்காய் பாலை ஊற்றி 5 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: