பால் கொழுக்கட்டை (3)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1 கப்

தேங்காய் துருவல் - 1/2 கப்

வெல்லத் தூள் - 1/2 கப்

ஏலக்காய் - 3

பால் - 1/2 கப்

செய்முறை:

புழுங்கல் அரிசியில் தண்ணீர் ஊற்றி 1 அல்லது 2 மணிநேரம் ஊற வைக்கவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.

அரிசி ஊறிய பிறகு தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு தேங்காய் துருவலை சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அரைத்த மாவின் பதம் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க வேண்டும்.

பிறகு அரைத்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் போடவும்.

வெல்லம் கரைந்ததும் அதில் செய்து வைத்திருக்கும் உருண்டைகளை போட்டு 10 நிமிடம் வேக விடவும்.

வெந்ததும் அதில் பாலை ஊற்றி ஒரு முறை கிளறி விடவும்.

5 நிமிடம் கழித்து உருண்டைகள் நன்கு வெந்ததும் இறக்கி வைத்து விடவும்.

இறக்கி வைத்து 5 நிமிடம் கழித்து பரிமாறவும்.

குறிப்புகள்: