பால் கொழுக்கட்டை

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்

பாசிப்பருப்பு – 1/4 கப்

வெல்லம் – ஒரு அச்சு

தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி

பால் – ஒரு டம்ளர்

ஏலக்காய் தூள் – சிறிதளவு

செய்முறை:

தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். பருப்பை மலர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

தண்ணீரை கொதிக்க வைத்து அரிசி மாவில் கொஞ்சம், கொஞ்சமாக விட்டு கிளறவும். கிளறிய மாவில் இருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து நீளவாக்கில் உருட்டவும்.

வேக வைத்துள்ள பருப்பில் மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

பருப்பு தண்ணீர் கொதி வர ஆரம்பித்ததும் உருட்டிய உருண்டைகள் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்கவும்.

கொழுக்கட்டை வெந்தபின் பொடித்த வெல்லம், பால் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து வெல்லம் கரைந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

தேங்காய் துருவல் மற்றும் பாலிற்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்து செய்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.