பால் அல்வா
தேவையான பொருட்கள்:
பால் - 2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
முந்திரி - 6
ஏலக்காய் - 2
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
முந்திரியை உடைத்துக் கொள்ளவும். ஏலக்காய் வாயில் தட்டுப்படாமல் இருப்பதற்கு சர்க்கரையை ஏலக்காய் விதையுடன் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு சுண்ட காயும் வரை கிளறவும்.
சிறிய பேனில் நெய் ஊற்றி முந்திரியை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பால் ஓரளவு திரண்டதும் சர்க்கரை மற்றும் ஒரு தேக்கரண்டி நெய்யை சேர்த்து சுண்ட காய்ச்சவும்.
பாலானது கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது அடுப்பை அணைத்து நன்கு கிளறி விடும் போது இன்னும் கெட்டியான பதத்திற்கு வரும். மிகவும் சுவையான பால் அல்வா ரெடி.
குறிப்புகள்:
பாலை அடிக்கடி அடுப்பில் இருந்து இறக்கி 2 நிமிடம் கழித்து கிளறி விட்டு மீண்டும் அடுப்பில் குறைந்த தீயில் வைத்தால் சீக்கிரம் திரண்ட பதம் வந்துவிடும்.